கோமாளி பக்கம்

பிரபாகரன் என்று காட்டப்பட்ட உடல் சிங்கள ராணுவ வீரர்?

இலங்கை முள்ளி வாய்க்காலில் கடந்த ஆண்டு மே மாதம் 18-ந்தேதி நடந்த உச்சக்கட்ட சண்டையில் பல்லாயிரக்கணக்கான ஈழத் தமிழர்கள் கொல்லப்பட்டனர். சிங்கள ராணுவ வீரர்கள் தரப்பில் சுமார் 30 ஆயிரம் பேர் செத்ததாக சமீபத்தில் முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகா கூறினார். இந்த உச்சக்கட்ட சண்டை யில் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதாக சிங்கள ராணுவம் கூறியது. இதன் மூலம் விடுதலைப்புலிகளை முழுமையாக அழித்து விட்டதாக சிங்கள தலைவர்கள் கொக்கரித்தனர். ஆனால் கடந்த 8 மாதங்களாக விடுதலைப்புலிகள் எது பற்றியும் தகவல் வெளி யிடாமல் அமைதிகாத்தனர். கடந்த 14-ந்தேதி (தை மாதம் 1-ந்தேதி) விடுதலைப்புலிகள் தங்களது புதிய இணையத்தளம் மூலம் பிரபாகரன் உயிருடன், ரகசிய இடத்தில் நல்ல உடல் நலத்துடன் இருக்கிறார் என்றும், உரிய நேரத்தில் மக்கள் முன் தோன்றுவார் என்றும் தெரிவித்தது. இது உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் வாழும் ஈழத் தமிழர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பிரபாகரனுடன் உளவுப்பிரிவுத் தலைவர் பொட்டு அம்மான், கடல்புலிகளின் தலைவர் சூசை ஆகியோரும் இருப்பதாக தகவல்கள் வெளியானது. இது சிங்களர்களுக்கு கடும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. என்றாலும் பிரபாகரன் என்று ஒருவரது உடல் காட்டப்பட்டதால் அது பிரபாகரனாகத்தான் இருக்கும் என்று சிங்களர்கள் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் ராணுவத்தினர் காட்டிய உடல் பிரபாகரன் அல்ல, அது ஒரு சிங்கள ராணுவ வீரரின் உடல் என்ற தகவல் இன்று (வெள்ளி) காலை வெளியானது. தமிழ் வின் இணையத்தளத்தில் அந்த சிங்கள ராணுவ வீரரின் புகைப்படங்களும் வீடியோ காட்சிகளும் வெளியிடப்பட்டுள்ளன. குறிப்பிட்ட அந்த சிங்கள ராணுவ வீரர் அச்சு அசல் பிரபாகரன் போலவே காணப்படுகிறார். அவரது உயரம், உடல் அமைப்பு, முகச்சாயல், தொப்பி, பார்வை, மீசை எல்லாம் பிரபாகரனை ஒத்திருக்கின்றன. சிங்கள ராணுவ உயர் அதிகாரிகள் அவரை சுட்டுக்கொன்று விட்டு, பிரபாகரனை கொன்று விட்டோம் என்று அறிவித்திருப்பதாக அந்த இணையளத்தளத்தில் கூறப்பட்டுள்ளது.

வீடியோவை காண http://uk.video.yahoo.com/watch/6823777/17745760
Advertisements

ஜனவரி 22, 2010 Posted by | நாட்டுநடப்பு | பின்னூட்டமொன்றை இடுக

துவாரகா சித்திரவதை செய்து படுகொலை?

Dwaraka

விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் மகள் துவாரகாவின் உடல் எனக் கூறி சில படங்கள் வெளியாகியுள்ளன. நிர்வாண கோலத்தி்ல உடல் உள்ளதால் அவர் பாலியல் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

ஈழப் போரின் கடைசி கட்டத்தில் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த பலர் ராணுவத்திடம் சரணடைந்தனர். சில வெளி சக்திகளின் அறிவுரையின் பேரில், கேபி உள்ளிட்டோரின் அறிவுறுத்தலின் பேரில் இவர்கள் சரணடைந்தனர். அவர்களில் துவாரகாவும் ஒருவர் எனத் தெரிகிறது.

இந் நிலையில் துவாரகாவின் உடல் என்று கூறி சில புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. இது பிரபாகரனின் மகள்தானா என்பது உறுதியாகத் தெரியவில்லை.

ஆனால் இந்தப் பெண்ணின் உடல் கடும் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு பின்னர் கொல்லப்பட்டது போலத் தெரிகிறது. நிர்வாண கோலத்தில் உடல் உள்ளது. எனவே ராணுவத்தினரால் பாலியல் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு இவர் கொல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

பிரபாகரனின் மூத்த மகன் சார்லஸ் அந்தோணியின் மரணம் மட்டுமே புலிகள் இயக்கத்தினரால் உறுதி செய்ய்பட்டுள்ளது. பிரபாகரன், அவரது மனைவி மதிவதனி, இளைய மகன் பாலச்சந்திரன், துவாரகா ஆகியோர் குறித்து தெளிவான தகவல்கள் யாரிடமும் இல்லை.

சில மாதங்களுக்கு முன்பு பாலச்சந்திரனின் உடல் என்று கூறி சில புகைப்படங்கள் வெளியாகின. இந்த நிலையில் துவாரகாவின் உடல் என்று கூறி சில படங்கள் வெளியாகியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இலங்கை ராணுவத்தினர் எந்த அளவுக்குக் கொடூரமாக, ஐ.நா. போர் நிறுத்த ஜெனீவா உடன்படிக்கையை மீறி வெறித்தனமாக நடந்து கொண்டுள்ளனர் என்பதைக் காட்டுவதற்காக இந்தப் படங்கள் வெளியாகியுள்ளதாக ஈழத் தமிழர் இணையங்கள் கூறியுள்ளன.

சரணடைய வந்த புலிகள் தலைவர்களை ஈவு இரக்கமின்றி சுட்டுக் கொல்லுமாறு கோத்தபயா ராஜபக்சே உத்தரவிட்டார் என்று சில தினங்களுக்கு முன்பு பொன்சேகா கூறியிருந்தார். ஆனால் சிங்களர்கள் மத்தியில், நம்மைக் காட்டிக் கொடுத்து விட்டார் என்று கொதிப்பு கிளம்பியதால் நான் அப்படிச் சொல்லவில்லை என்று அவர் மறுத்தார் என்பது நினைவிருக்கலாம்.

கொல்லப்பட்ட இந்தப் பெண் துவாரகாவோ இல்லையோ, ஒரு பெண் மிகக் கொடூரமான பாலியல் கொடுமைக்குள்ளாக்கப்பட்டு கொல்லப்ட்டிருக்கிறார். அதைச் செய்தது இலங்கை ராணுவம் என்ற உண்மை மட்டுமே இப்போதைக்கு தெளிவாகத் தெரியும் உண்மையாகும்.

திசெம்பர் 16, 2009 Posted by | Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

கவிஞர் தாமரையின் கண்ணீர் உங்களுக்காக!

கண்ணகி மண்ணில் இருந்து ஒரு கருஞ்சாபம்!

ஏ இந்தியாவே…!

எத்தனை கொடுமைகள் செய்துவிட்டாய்
எங்கள் தமிழினத்திற்கு…
எத்தனை
வழிகளில்கெஞ்சியும் கூத்தாடியும்
காலில் விழுந்தும் கதறியும்
கொளுத்திக் கொண்டு செத்தும்
தீர்ந்தாயிற்று…

எதுவுமே காதில் விழாத உங்களுக்கு
இன்னும் தராத ஒன்றுமிச்சம் உண்டு என்னிடம்…
பட்டினியால் சுருண்டு மடிந்த
பிஞ்சிக் குழந்தைகளின் படத்தைப் பார்த்து
அழுது வீங்கிய கண்களோடும்
அரற்றிய துக்கத்தோடும்
களைந்த கூந்தலோடும்
வயிரெரிந்து இதோ விடுகிறேன்..

கண்ணகி மண்ணில் இருந்து
ஒரு கருஞ்சாபம்!

குறள் நெறியில் வளர்ந்து
அறநெறியில் வாழ்ந்தவள்
அறம் பாடுகிறேன்!

தாயே என்றழைத்த வாயால்
பேயே என்றழைக்க வைத்துவிட்டாய்
இனி நீ வேறு, நான் வேறு!

ஏ இந்தியாவே!
ஆயுதம் கொடுத்து வேவு விமானம் அனுப்பி
குண்டுகளைக் குறிபார்த்துத்
தலையில் போடவைத்த உன்தலை
சுக்குநூறாய் சிதறட்டும்!

ஒரு சொட்டு தண்ணீருக்காய் விக்கி மடிந்த
எங்கள் குழந்தைகளின் ஆத்மா சாந்தியடைய
இனி ஒரு நூற்றாண்டுக்கு
உன் ஆறுகள் எல்லாம் வற்றிப் போகட்டும்!

மழைமேகங்கள் மாற்றுப் பாதைகண்டு
மளமளவென்று கலையட்டும்!

ஒரு பிடி சோற்றுக்கு எங்களை ஓடவைத்தாய்
இனி உன் காடு கழனியெல்லாம் கருகிப்போகட்டும்!

தானியங்கள் எல்லாம் தவிட்டுக்குப்பைகளாய்
அறுவடையாகட்டும்!

மந்தைகளைப் போல் எம்மக்களை துரத்தினீர்கள்
உங்கள் மலைகள் எல்லாம்
எரிமலைக் குழம்புகளைக்
கக்கி சாம்பல் மேடாகட்டும்!

இரக்கமின்றி ரசாயனக் குண்டுவீசிய அரக்கர்களே…
உங்கள் ரத்தம் எல்லாம் சுண்டட்டும்!

உங்கள் சுவாசம் பட்டு சுற்றமெலலாம் கருகட்டும்!
எதிரிகள் சூழ்ந்து
உங்கள் தூக்கத்தைப் பறிக்கட்டும்!

தெருக்கள் எல்லாம் குண்டுவெடித்து
சிதறிய உடல்களோடு
சுடுகாடு மேடாகட்டும்!

போர் நிறுத்தம் கோரியிருக்கிறோம் என்று
கூசாமல் பொய் சொன்ன வாய்களில்
புற்றுவைக்கட்டும்!

வாய் திறந்தாலே ரத்தவாந்திக் கொட்டட்டும்!
எங்கள் எலும்புக் கூடுகள் மீது
ஏறியமர்ந்து அரசாட்சி செய்தீர்களே…

உங்கள் சிம்மாசனம் வெடித்துத்
தூள்தூளாகட்டும்!
உங்கள் வீட்டு ஆண்கள் ஆண்மையிழக்கட்டும்……

பெண்களின் கருப்பைகள் கிழியட்டும்!

நிர்வாணமாக எங்களை அலையவீட்டீர்களே…
உங்கள் தாய் தந்தையர் பைத்தியம் பிடித்து
ஆடையைக் கிழித்துத் தெருக்களில் அலையட்டும்!

எங்கள் இளைஞர்களை மின்சாரம் செலுத்தி
சித்திரவதையில் சாகடித்தீர்களே…
உங்கள் தலையில் பெருமின்னல் பேரிடி இறங்கட்டும்!

எங்கள் சகோதரிகளைக் கதறக்கதற சீரழித்த
சிங்களவன் மாளிகையில்விருந்து கும்மாளமிட்டவர்களே…
உங்கள் வீட்டு உணவெல்லாம் நஞ்சாகட்டும்!

உங்கள் பெண்களெல்லாம்
படுக்கையைப் பக்கத்து வீட்டில் போடட்டும்!

நரமாமிசம் புசித்தவர்களே…
உங்கள் நாடி நரம்பெல்லாம்
நசுங்கி வெளிவரட்டும்!

இன்னும் ஓர் ஆயிரம் ஆண்டுகளுக்கு
புல் பூண்டு முளைக்காமல் போகட்டும்…

ஆழிப்பேரலை
பொங்கியெழுந்து
அத்தனையும் கடல் கொண்டுபோகட்டும்!

நீ இருந்த இடமே இல்லாமல் போகட்டும்!

நாசமாகப் போகட்டும்! நாசமாகப் போகட்டும்!
நிர்மூலமாகப் போகட்டும்! நிரந்தரமாகப் போகட்டும்!
……….

பின்குறிப்பு:

உங்கள் குழந்தைகளை சபிக்கமாட்டேன்!
குழந்தைகள் எங்கிருந்தாலும்குழந்தைகளே…
அவர்கள் நீடுழி வாழட்டும்!

எம் குழந்தைகள் அழுதாலும்
உன் குழந்தைகள் சிரிக்கட்டும்!
உன் குழந்தைகள் சிரிக்கட்டும்!

(இந்த கவிதையை வாசிக்கும் பொழுது உங்கள் கண்ணில் கண்ணீர் துளிர்த்தால் நீங்கள் உணர்வுள்ள தமிழரே!)

ஒக்ரோபர் 10, 2009 Posted by | கவிதை | | பின்னூட்டமொன்றை இடுக

ஜூ.வி ஆசிரியர் விகேஷ் நீக்கம் ஏன்? – இலங்கை அரசின் கைக்கூலி பத்திரிகையாளர்கள் – தெரியாத செய்திகள்!

தமிழக ஊடகவியலாளர்களிடையே சமீபத்தில் பரபரப்பாகப் பேசப்படும் ஒரு விஷயம், விகடன் குழுமத்திற்குச் சொந்தமான ஜூனியர் விகடன் இதழில் நிர்வாக ஆசிரியராக இருந்த விகேஷ் என்பவர் அதிரடியாக  வேலைநீக்கம் செயப்பட்டிருப்பது பற்றித்தான். அவருக்கு சென்னையில் மட்டும் சொந்தமாக நான்கு வீடுகள் இருப்பதாகவும், சில பெரிய புள்ளிகளோடு சேர்ந்து ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவதாகவும், அது தொடர்பான கட்டப் பஞ்சாயத்துகள் போன்றவற்றில் நீண்டகாலமாகவே அவர் கைதேர்ந்தவர் என்றும், ஒட்டு மொத்தமாக தன் தொழிலுக்கு ஜுனியர் விகடன் பெயரைத் தவறாகப் பயன்படுத்திக் கொண்டதாகவும் கூறுகிறார்கள்.

சமீபத்தில் மோசடி வைத்தியசாலை தொடர்பான கட்டுரை ஒன்றைப் பிரசுரிக்காமல் தவிர்த்ததைத் தொடர்ந்து,  நிர்வாகம் அவரைக் கண்காணித்ததாகவும் தனியார் துப்பறியும் நிறுவனம் மூலமாக விசாரணை நடத்தியதில் பல லட்சமோ, கோடியோ மோசடி நடந்திருப்பது உறுதியானதாகவும், அதன் தொடர்ச்சியாகத்தான் விகேஷ் அலுவலத்துக்குள் அனுமதிக்கப்படாமலேயே வீட்டிற்கு அனுப்பப் பட்டதாகவும் சொல்லப்படுகிறது.

இதைக்காட்டிலும் தமிழ் மக்களுக்கு அதிர்ச்சியூட்டத்தக்க குற்றச்சாட்டு ஒன்றும் உள்ளது. அது விகேஷ் இலங்கைத் தூதரகத்துடன் வைத்திருந்த உறவு தொடர்பானது. இன அழிப்புப் போரின் போது தமிழகத்து அரசியல்வாதிகளையும், பத்திரிகையாளர்களையும் ‘திறமையாக’க் கையாண்டதற்காக சென்னையில் இலங்கை அரசின் துணைத்தூதராக இருந்த அம்சாவுக்கு பதவி உயர்வு கொடுத்து இலண்டனுக்கு அனுப்பி வைத்தது, இலங்கை அரசு. தமிழ் ஊடகவியலாளர்களில் சிலர் அம்சாவோடு மிக நெருக்கமாகப் பழகி வந்திருக்கிறார்கள். போருக்கு முன்னர்; இலங்கை அரசின் பிரச்சாரத்தை முன்னெடுக்க அவர்களுக்குச் சன்மானங்கள் வழங்கப்பட்டன. போரின் வெற்றிக்குப் பின்னர், செய்த வேலைக்காக சன்மானமும் விருந்தும் வைக்கப்பட்டது.

Hamsaஅம்சாவிடம் கேள்வி எழுதிக் கொடுத்து ராஜபட்சேவிடம் பதில் வாங்கி, அதைத் தொடர்ந்து வெளியிட்டு வந்தன, சில ஊடகங்கள். போர் தீவீரமாக நடந்த காலத்தில் வழக்கறிஞர்களும் மாணவர்களும் அரசியல் அமைப்புகளும் போர் நிறுத்தம் கேட்டு போராடிய காலத்தில், இலங்கைத் தூதரகம் துரோகி கருணாவின் நேர்காணலுக்கான ஏற்பாட்டைச் செய்து, இங்குள்ள எல்லா பெரிய ஊடக நிறுவனங்களிலும் அது வெளியானது. ஜூனியர் விகடன் இரண்டு வாரமாக துரோகி கருணாவின் பேட்டியை வெளியிட்டது. இந்த நேர்காணல்களை  வெளியிடும் சுதந்திரம் எல்லா ஊடகங்களுக்குமே உண்டு என்று வாதிடலாம்.  ஆனால், அதிர்ச்சிகரமான செய்தி என்ன வென்றால்,  புலிகளின் அரசியல் பிரிவுத்தலைவர் பா.நடேசனின் நேர்காணலை ஜூனியர் விகடனும், டெக்கான் குரோனிக்கலும் வெளியிட மறுத்து கருணாவின் நேர்காணலை வெளியிட்டதுதான்.

தமிழ் ஊடகங்களில் உள்ள கணிசமான பத்திரிகையாளர்கள் வளைக்கப்பட்டார்கள். சில மானமுள்ள பத்திரிகையாளர்கள் அம்சாவின் அன்பளிப்புகளைப் புறக்கணித்தும் இருக்கிறார்கள்.இலங்கை தூதரகத்தின் செயல்பாடுகளைக் கண்டித்தும் அம்பலப்படுத்தியும் எழுதிய ஊடகங்களும் உண்டு. போருக்கு முன்னரும் பின்னரும் ஆங்கிலம் பேசும் ஊடகவியலாளர்களை கொழும்புக்கு அழைத்துச் சென்று குளிப்பாட்டியும். தமிழ் பேசும் ஊடகவியலாளர்களை சென்னையிலேயே குளிப்பாட்டியதும் கூட நடந்திருக்கிறது.

இதில் விகேஷ் மட்டுமல்ல, ஜுனியர் விகடன் குழுமத்தில் இப்போதும் பணியாற்றிவரும் ஒருவர்தான் அம்சாவுக்கு அதிகமான தரகு வேலை பார்த்ததாகவும், இப்போது புதிதாக வந்திருக்கும் துணைத் தூதருக்கும் அவரே ஊடகத் தரகராக இருப்பதாகவும் பேச்சு அடிபடுகிறது.

இவரது பணி வித்தியாசமானது; யாராவது புலிகளை ஆதரித்து எழுதினால், உடனே இவர் விகடனின் தீவீர வாசகர் என்ற போர்வையில் பிரமுகர்களை அழைத்துக் கொண்டு விகடன் நிர்வாகத்தினரைப் பார்க்கச் செல்வார். இவர் அழைத்துச் செல்லும் நபர் இலங்கை தூதரகத்தால் ஏற்பாடு செய்யப்படுபவராக இருப்பார். இவர் போய் ‘விகடனில் ஒரே புலி ஆதரவு கட்டுரையாக வருகிறது’ என்று பற்ற வைப்பார். இலங்கை தூதரகத்தால் இவருக்கு வழங்கப்பட்ட பல பணிகளில் இதுவும் ஒன்று.

தனிப்பட்ட பத்திரிகையாளர்கள் மட்டுமல்ல, சென்னை அரசினர் தோட்டத்திற்குள் இருக்கும் பத்திரிகையாளர் மன்றம் என்கிற அமைப்பின் பழைய கட்டிடம் இடிக்கப்பட்டு நவீன வசதிகளுடன் புதிய கட்டிடம் ஒன்று கட்டப்பட்டிருக்கிறது. தமிழ் ஊடகவியலாளர்களுக்காகக் கட்டப்பட்ட இந்த கட்டிடத்திற்குப் பெயர் வைக்கும் போது ஒரு பைசாத் தமிழன் இதழை நடத்திய அயோத்திதாசப் பண்டிதரின் பெயர் முதல் தினத்தந்தி  ஆதித்தனார் பெயர் வரை, ஏதாவது ஒரு ஊடகவியல் சார்ந்தோரின் பெயரை வைத்திருக்கலாம்.

ஆனால், அக்கட்டிடத்திற்கு வைக்கப்பட்ட பெயர் என்ன தெரியுமா? ” எஸ்.ஆர். எம். மாளிகை”. அதாவது, எஸ்.ஆர். எம். கல்லூரி முதலாளி பச்சைமுத்துவின் நிதியில் அந்தக் கட்டிடம் கட்டப்பட்டதால், அவர் பெயரையே கட்டிடத்திற்கு வைத்து விட்டார்களாம். இலங்கை அரசின் முன்னாள் அதிபர் சந்திரிகாவிடம் விருது வாங்கியவரும் தொடர்ந்து தமிழ் மக்களுக்கு எதிராக நஞ்சைக் கக்கிவருபவருமான ஹிந்து ராமைக் கொண்டு ‘எஸ்.ஆர்.எம்‘  என்ற அந்தக் கட்டிடம் திறக்கப்படுகிறது என்றால், பத்திரிகையாளர் மன்றத்தின் இன்றைய சில துரோக நிர்வாகிகளுக்கும் இலங்கைத் தூதரகத்திற்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா என்பதை ஊடக நிறுவனங்கள் விசாரித்திருக்க வேண்டும்.

எஸ். ஆர்.எம். கல்லூரியின் மர்ம அறையில் மாணவர்களை அடைத்து வைத்துத் தாக்கியதும். அந்தக் கல்லூரியின் தொழில் நுட்பச் சான்றிதழ்கள் செல்லாதவை என்று இந்திய தொழில் கூட்டமைப்பு அறிவித்தது குறித்தும் எஸ். ஆர். எம். கல்லூரி நிர்வாகத்தின் கட்டணக் கொள்ளை குறித்தும் யோக்கியமான எந்தப் பத்திரிகையாவது வெளியில்  கொண்டு  வந்திருக்கிறதா? போர் கொடூரமாக நடந்த காலத்தில், போர் நிறுத்தம் கோரியோ சிங்கள இனவெறி அரசைக் கண்டித்தோ ஒரு அறிக்கை கூட வெளியிடவில்லை இந்த ஊடக அமைப்பு. காரணம் இதில் தலைமைப் பொறுப்பில் உள்ள சிலர் எது செய்தாலும் இந்து ராமிடம் கேட்டுத்தான் செய்வார்களாம்.

ஈழத்தமிழினத்திற்கெதிராக நடைபெற்ற ஒரு இன அழிப்பு போரை இருட்டடிப்பு செய்வதற்காகவும், சிங்கள இனவெறி அரசை நியாயப்படுத்துவதற்காகவும் கைநீட்டி காசு வாங்கிய பத்திரிகையாளர்களின் குற்றம் வெறும் ஊழல் குற்றமல்ல. அது போர்க்குற்றத்திற்கு இணையாக, தண்டிக்கப்பட வேண்டிய ஒரு கிரிமினல் குற்றம். இவர்கள் இனப்படுகொலையின் கூட்டாளிகள்.

எண்ணிப்பாரக்கவே இயலாத இந்த அருவருப்பான நடவடிக்கை சிறு சிறு ஊழல்கள் வழியாகத்தான வளர்ந்து விசுவரூபமெடுத்திருக்கிறது. மாணவ நிருபராக இருந்து ஜுனியர் விகடனுக்கு நிர்வாக ஆசிரியராக வந்தவர்தான் விகேஷ். பொறுப்புக்கு வந்த மாணவ நிருபர்கள் மிக மிக தந்திரமாக செய்த ஒரு விஷயம், தங்கள் இருப்புக்கு இன்னொரு மாணவ நிருபர் உலைவைத்து விடாமல் பார்த்துக் கொண்டதுதான். ஒரு கட்டத்தில் மாணவ நிருபர்களின் வரவே குறைந்து ஒப்புக்கு மட்டும் அந்தத் திட்டம் இப்போது விகடனில் இருப்பதாக அறிய முடிகிறது.

நேர்மை, ஊடக தர்மம், எழுத்தை மட்டுமே நம்பி வாழ்கிற பத்திரிகையாளர்கள் பிழைக்கத் தெரியாதவர்களாகவும், ஊழல், செல்வாக்கை வளர்த்து அதிகார பீடங்களுக்கு  வருபவர்கள் திறமைசாலிகளாகச் சித்தரிக்கப்பட்டதும்  ஊழல்மயப்பட்ட ஊடக ஒழுக்கம் கட்டமைத்த கருத்தியலே. அந்தக் கருத்தியலின் ஒரு நவகால அடையாளம் மட்டுமே விகேஷ். ஒரு எல்லை வரை ஊழல், கட்டப்பஞ்சாயத்து போன்ற இழி செயல்களை எல்லா ஊடக நிறுவனங்களும் அனுமதித்தே வந்திருக்கின்றன. தமிழ் மக்களின் மனச்சாட்சி. நாடித்துடிப்பு என்றெல்லாம் பறைசாற்றிக் கொள்ளும் இந்த ஊடகங்கள் பத்திரிகையாளர்களுக்கு வழங்கும் ஊதியம் மிகவும் சொற்பமானது. உழைப்பைச் சுரண்டி ஊதியம் கொடுக்காத முதலாளிகள் ஒரு எல்லை வரை தனது நிருபர்கள் வெளியில் லஞ்சம் வாங்குவதை  அனுமதிக்கிறார்கள். இதுதான் பெரும்பலான தமிழக பத்திரிகையாளர்களின் நிலை.

தொடக்க காலத்தில் போலீசு அக்கிரமங்களை வெளிக்கொண்டு வந்த ஜுனியர் விகடன், நாளடைவில் போலீசு புகழ்பாடத் துவங்கியது. போலீசை வைத்து வாசகர்களுக்குச் சட்ட விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிலைக்கு அது வளர்ந்து சென்றது. சட்ட விழிப்புணர்வை ஏற்படுத்த  பல்வேறு வழக்கறிஞர்கள் இருக்க, போலீசாரைக் கொண்டு சட்ட விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் தொடங்குகிறது விகடன் நிருபர்களின் போலீசு கூட்டு. ரௌடி, போலீசு, அரசியல்வாதி கூட்டணியோடு பத்திரிகையாளர்களில் சிலரும் இணைந்து வளர்ந்த கதை சுவாரசியமானது. போலீசார் நடத்திய கட்டப்பஞ்சாயத்துகளில் பத்திரிகையாளர்களும் கூட்டு சேர்ந்து தொழில் துரோகம் செய்த விஷயங்கள் ஏராளமாக இருக்கின்றன. காலம் தோறும் இத்தகைய மோசடிப் பேர்வழிகள் குமுதம், விகடன் குழுமம், நக்கீரன் என எல்லா ஊடகங்களிலுமே இருந்துதான் வந்திருக்கிறார்கள். ஆனால், அதிர்சியளிக்கும் விஷயமாக அத்தனை பேரும் பேசிக் கொள்வது விகடனுக்குள்ளேயே இது நடந்து விட்டது என்பதுதான்

பாரம்பரியமிக்க பத்திரிகை நிறுவனம் எங்களுடையது என்று மூச்சுக்கு முந்நூறு தடவைச் சொல்லிக் கொள்ளும் விகடன் தங்கள் நிறுவனத்தின் பெயரை தவறான வகையில் பயன்படுத்திய மோசடிப் பேர்வழி விகேஷ் மீது ஏன் சட்ட நடவடிக்கை எடுக்க வில்லை என்கிற கேள்வி இங்கே முக்கியமானது. சில வருடங்களுக்கு முன்பு இதே ஜுனியர்விகடனில் புதிதாக வேலைக்குச் சேர்ந்த பத்திரிகையாளர் ஒருவர் பிரச்சினை ஒன்றில் செய்தியை வெளியிடாமல் இருக்க, சம்பந்தப்பட்டவர்களை மிரட்டுகிற தொனியில் பேசி வகையாகச் சிக்கிக் கொண்டார். அப்போது ஜூனியர் விகடன் நிர்வாகத்தினர், அவரை போலீசில் ஒப்படைத்தார்கள். அவர் சிறைக்கு அனுப்பப்பட்டார். விகேஷ் போன்றோரின் குற்றங்களை ஒப்பிடும்போது அது மிகச்சாதாரண குற்றம்.

இலங்கைத் தூதரின் விருந்தைச் சுவைத்தவர்கள் முதல் எலும்பைச் சுவைத்தவர்கள் வரையிலான எல்லா குற்றவாளிகளும் அடையாளம் காட்டப்படவேண்டும். இதனைத் தெரிந்து கொள்வது தமிழ் மக்களின் உரிமை. ஆதாரங்கள் தெரியாத வண்ணம் இழைக்கப்படும் இத்தகைய குற்றங்களுக்கான ஆதாரங்களை அம்பலமாக்குவது நேர்மையான பத்திரிகையாளர்கள் ஒவ்வொருவரின் கடமை.

Source  : http://www.vinavu.com/2009/09/04/spy/

செப்ரெம்பர் 4, 2009 Posted by | நாட்டுநடப்பு | பின்னூட்டமொன்றை இடுக

ராஜீவ் காந்தியை சுட்டுக் கொல்ல சிங்கள ராணுவம் சதி செய்தது; இலங்கை ராணுவ முன்னாள் தளபதி தகவல்

இலங்கை ராணுவத்தின் கூட்டுப்படை தளபதியாக இருந்தவர் சிரில் ரண துங்கா. ஓய்வு பெற்று விட்ட இவர், “சமாதானத்தில் இருந்து போர், கிளர்ச்சியில் இருந்து பயங்கரவாதம்” என்று ஒரு புத்தகத்தை எழுதி உள்ளார், அதில் அவர் இலங்கை ராணுவத்தில் பணியாற்றிய போது ஏற்பட்ட அனுபவம் பற்றி எழுதி உள்ளார்.

அதன் விவரம் வருமாறு:-

இலங்கை அதிபராக இருந்த ஜெயவர்த்தனே ஈழ தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு இந்தியாவின் உதவியை 1987-ம் ஆண்டு நாடினார். இதையடுத்து இந்தியா-இலங்கை ஒப்பந்தம் ஒன்றை இருநாடுகளும் இணைந்து தயாரித்தன.

அப்போது ஜெயவர்த்தனே தனது பாதுகாப்பு ஆலோசகராக அவரது மகன் ரவி ஜெயவர்த்தனேவை நியமித்தார். முப்படைகளுடன் அடிக்கடி ஆலோசனை நடத்தி, ரவி தரும் அறிக்கைகளைப்படித்த பிறகே ஜெயவர்த்தனே எந்த முடிவையும் எடுப்பதை வழக்கமாகக்கொண்டிருந்தார்.

1987-ம் ஆண்டு ஜூலையில் இந்தியா-இலங்கை ஒப்பந்தத்தில் ஜெயவர்த்தனேவும், ராஜீவ் காந்தியும் கையெழுத்திட்டனர். அதற்காக ராஜீவ்காந்தி இலங்கைக்கு வந்தார்.

ராணுவ அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டபோது, சிங்கள ராணுவ வீரரான விஜயமுனி விஜித ரோஹன டிசில்வா, துப்பாக்கியால் ராஜீவ் காந்தியைத்தாக்கினார். ராஜீவ் சாதுர்யமாக விலகிக்கொண்டதால் துப்பாக்கியின் பின்புறப்பிடியின் அடியிலிருந்து தப்பினார். இந்த சம்பவம் அப்போது உலகம் முழுவதும் பரபரப்பாகப்பேசப்பட்டது. இச்சம்பவத்தை பல நாடுகள் கண்டித்ததால் ராஜீவ் காந்தியிடம் ஜெயவர்த்தனே மன்னிப்பு கேட்டு வருத்தமும் தெரிவித்தார்.

இந்தியா-இலங்கை ஒப்பந்தத்திற்கு இச்சம்பவத்தால் பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக ராஜீவ் காந்தி இதைப்பெரிது படுத்த வில்லை. ஆனால் ராணுவ அணி வகுப்பின் போது அவரை சுட்டுக்கொல்ல சதி திட்டம் தீட்டப்பட்டிருந்தது இப்போது தெரியவந்துள்ளது.

ராஜீவ் காந்திக்கு ராணுவ அணி வகுப்பு மரியாதை தரும் போது ராணுவத்தினர் வைத்திருக்கும் துப்பாக்கிகளில் குண்டுகள் இருக்கக்கூடாது ராணுவத்தினர் குண்டுகள் இல்லாத துப்பாக்கிகளை ஏந்தியவாறு தான் அணி வகுப்பில் பங்கேற்க வேண்டும் என்று பாதுகாப்பு ஆலோசகர் ரவி ஜெயவர்த்தனே தனது தந்தையிடம் கேட்டுக்கொண்டார். அதிபர் ஜெயவர்த்தனே இதை ஏற்றுக்கொண்ட போதிலும் அப்போதைய ராணுவத் தளபதியாக இருந்த லெப்டினெட் ஜெனரல் டி.ஜே.வீரதுங்கா இதை ஏற்காமல் எதிர்ப்பு தெரிவித்தார்.

துப்பாக்கியிலிருந்து குண்டுகளை அகற்றுவது படை வீரர்களின் மனநிலையைப்பாதிக்கும், படை வீரர்களின் மீதான நம்பிக்கையைத் குறைத்து விடும் என்று வீரதுங்கா தெரிவித்த தோடு, குண்டுகளை அகற்ற கடுமையாக எதிர்ப்பும் தெரி வித்தார். ஆனால் ரவி ஜெயவர்த்தனேயின் ஆலோசனைப்படி குண்டுகள் அகற்றப்பட்ட துப்பாக்கியை அணிவகுப்பு மரியாதையின் போது பயன்படுத்தினர்.

துப்பாக்கியிலிருந்து குண்டுகள் அகற்றப்பட்டதால் தான் ரோஹன டிசில்வா வேறு வழியின்றி துப்பாக்கி பிடியால் ராஜீவ் காந்தியைத்தாக்கும் சம்பவத்தை நிகழ்த்தினார். இந்த அணி வகுப்பின் போது, துப்பாக்கியில் தோட்டாக்கள் இருந்திருந்தால் அந்த ராணுவ வீரர் ராஜீவ்காந்தியை சுட்டுக்கொன்றிருப்பார்.

ரவி ஜெயவர்த்தனே இது போன்ற ஆலோசனையை வழங்கியிருக்கா விட்டால், ராஜீவ் காந்தி இலங்கையில் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் அல்லது துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்திருக்கலாம்.

இப்படிப்பட்ட ஆலோசனையை ரவி வழங்கியதற்கு கூறிய காரணம், எகிப்து நாட்டில் அதிபர் அன்வர் சதாத் ராணுவ அணி வகுப்பு மரியாதையை ஏற்கையில் தான் சுட்டுக்கொல்லப்பட்டார் என்பது தான். ராஜீவ் காந்தியை துப்பாக்கியின் பிடியால் தாக்கிய ராணுவ வீரன், முக்கியமான சம்பவத்தை நாளை நிகழ்த்த உள்ளேன். ஆகவே வீட்டிற்கு உயிருடன் திரும்பி வராமல் இருக்கலாம் எனது நண்பனிடம் ஏற்கனவே கூறி உள்ளான்.

இவ்வாறு அந்த புத்தகத்தில் எழுதப்பட்டு உள்ளது.

ஜூலை 17, 2009 Posted by | நாட்டுநடப்பு | பின்னூட்டமொன்றை இடுக

சிங்கள மயமாக்கல் தீவிரம்- மட்டக்களப்புடன் சிங்கள கிராமங்கள் இணைப்பு

நன்றி  – தட்ஸ்தமிழ்

மட்டக்களப்பு: தமிழ் மக்கள் பெரும்பான்மையாக உள்ள பாரம்பரிய தமிழர் பகுதியான மட்டக்களப்புடன், சிங்கள கிராமங்களை இலங்கை அரசு இணைத்துள்ளது. இதன் மூலம் மட்டக்களப்பை முழுமையாக சிங்கள மயமாக்க அது திட்டமிடுவது தெளிவாகியுள்ளது.

பாரம்பரிய தமிழர் பகுதிகளான திரிகோணமலை உள்ளிட்டவை இன்று சிங்கள மயமாகி விட்டன.

இந்த நிலையில் விடுதலைப் புலிகளிடமிருந்து மீட்கப்பட்டுள்ள வடக்கு மாகாணத்தை முழுமையாக சிங்கள மயமாக்கும் நோக்கில் அரசு ஈடுபட்டு வருகிறது.

படிப்படியாக இந்த வேலையைச் செய்து வரும் இலங்கை அரசு, இதன் பொருட்டே, இடம் பெயர்ந்தோர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள தமிழ் மக்களை அவர்களது சொந்த ஊர்களுக்கு செல்ல விடாமல் தடுத்து வைத்திருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், பல்வேறு சிங்கள கிராமங்களை மட்டக்களப்பு மாவட்டத்துடன் இணைத்துள்ளது அரசு. 18 வருடங்களுக்கு முன்பு சிங்கள மக்கள், மட்டக்களப்பு கோர்ட்டுக்குப் போவதில் சிரமம் இருப்பதாக கூறி இவற்றை அம்பாறை மாவட்டத்துடன் இணைத்தது இலங்கை அரசு என்பது நினைவிருக்கலாம்.

இந்த நிலையில், மீண்டும் இக்கிராமங்களை மட்டக்களப்பு மாவட்டத்துடன் அரசு இணைத்துள்ளது.

இதன் மூலம் சிங்கள மக்களின் எண்ணிக்கையை அதிகரித்து, படிப்படியாக மட்டக்களப்பை சிங்கள பகுதியாக மாற்ற சிங்கள அரசு முயற்சிப்பதாக கருதப்படுகிறது

ஜூலை 17, 2009 Posted by | Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

நானே…

உன்னை பேச வேண்டாம் என்றதும் நான் தான்

நீ  பேசுவாய் என எதிர்ப்பார்த்ததும் நான் தான்….

உன்னை வெறுக்கிறேன் என்றதும் நான் தான்

உன்னை தவிர யாரையும் விரும்பவில்லை என்பதும் நான் தான்…

நீ  வேண்டாம் என்றதும் நான் தான்

உன்னை தவிர யாரும் வேண்டாம் என்பதும் நான் தான்…

ஜூன் 9, 2009 Posted by | கவிதை | பின்னூட்டமொன்றை இடுக

எனக்கும் சொல் …

எப்படி மறந்தாய்
சொல் அன்பே
நானும்
உன்னை
மறக்க…

ஜூன் 2, 2009 Posted by | கவிதை | பின்னூட்டமொன்றை இடுக

அன்பே நலமா……?

அன்பே நலமா……?
நீ அருகில் இருக்கும் போது,
உன் அன்பு எனக்கு தெரியவில்லை.
நீ நெருங்கி வரும் பொழுது,
உன் பாசம் எனக்கு புரியவில்லை.
நீ கனவில் வரும் போது,
உன் நட்பை நான் அறியவில்லை .

ம்…..ம் … இழந்துவிட்டேன்..
அந்த சுகமான நாட்களை.
இப்போது தவிக்கின்றேன்
உன் அன்புக்காக,
பாசத்துக்காக
நேசத்துக்காக.

நீ
தொலைவில் இருக்கிறாயா-
ஆனால்
உன் அன்பு எனக்கு தெரிகிறதே
நீ விலகிப் போகிறாயா ?
ஆனால்
உன் பாசம் எனக்கு புரிகிறதே
நீ கனவில் வரவில்லையா- ஆனால்
என் மனதில் நிற்கின்றாயே.

ஜூன் 2, 2009 Posted by | கவிதை | பின்னூட்டமொன்றை இடுக

நா‌ர்ச‌த்து, ‌கீரைக‌ள் அவ‌சிய‌ம்

நார்ச்சத்து உ‌ள்ள ணவுகள் பெருங்குடலில் புற்று நோய் வராமல் தடுக்கும்.கோதுமை, சோளம், கேழ்வரகு, கம்பு முதலியன நா‌ர்‌ச்ச‌த்து‌ள்ள உணவு‌ப் பொரு‌ட்க‌ளி‌ல் அடங்கும்.

கீரைகளில் கால்சியம், சோடியம், க்ளோரைன் எனப்படும் உலோகச்சத்து அதிகம் உண்டு.

கீரையில் சக்கரை கிடையாது.ஆகவே நீரிழவு நோயாளிகளுக்கும் இது உகந்தது.பூண்டும் மிகவும் நல்லது.

கூடிய வரையில் ஆரோக்கிய உணவுப்பழக்கம் மேற்கொள்ளுதல் வியாதிகளை வர விடாமல் தடுக்கும். ‌

‌வியா‌தி வ‌ந்த ‌பி‌ன் அத‌ற்கே‌ற்ற உணவுகளை க‌ட்டு‌ப்பா‌ட்டுட‌ன் சா‌ப்‌பிடுவதை‌க் கா‌ட்டிலு‌ம், வருவத‌ற்கு மு‌ன் ஆரோ‌க்‌கியமான உணவுகளை உ‌ண்பதே ‌சிற‌ந்தது

மே 15, 2009 Posted by | ஆரோக்கியம் | பின்னூட்டமொன்றை இடுக