கோமாளி பக்கம்

துவாரகா சித்திரவதை செய்து படுகொலை?

Dwaraka

விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் மகள் துவாரகாவின் உடல் எனக் கூறி சில படங்கள் வெளியாகியுள்ளன. நிர்வாண கோலத்தி்ல உடல் உள்ளதால் அவர் பாலியல் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

ஈழப் போரின் கடைசி கட்டத்தில் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த பலர் ராணுவத்திடம் சரணடைந்தனர். சில வெளி சக்திகளின் அறிவுரையின் பேரில், கேபி உள்ளிட்டோரின் அறிவுறுத்தலின் பேரில் இவர்கள் சரணடைந்தனர். அவர்களில் துவாரகாவும் ஒருவர் எனத் தெரிகிறது.

இந் நிலையில் துவாரகாவின் உடல் என்று கூறி சில புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. இது பிரபாகரனின் மகள்தானா என்பது உறுதியாகத் தெரியவில்லை.

ஆனால் இந்தப் பெண்ணின் உடல் கடும் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு பின்னர் கொல்லப்பட்டது போலத் தெரிகிறது. நிர்வாண கோலத்தில் உடல் உள்ளது. எனவே ராணுவத்தினரால் பாலியல் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு இவர் கொல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

பிரபாகரனின் மூத்த மகன் சார்லஸ் அந்தோணியின் மரணம் மட்டுமே புலிகள் இயக்கத்தினரால் உறுதி செய்ய்பட்டுள்ளது. பிரபாகரன், அவரது மனைவி மதிவதனி, இளைய மகன் பாலச்சந்திரன், துவாரகா ஆகியோர் குறித்து தெளிவான தகவல்கள் யாரிடமும் இல்லை.

சில மாதங்களுக்கு முன்பு பாலச்சந்திரனின் உடல் என்று கூறி சில புகைப்படங்கள் வெளியாகின. இந்த நிலையில் துவாரகாவின் உடல் என்று கூறி சில படங்கள் வெளியாகியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இலங்கை ராணுவத்தினர் எந்த அளவுக்குக் கொடூரமாக, ஐ.நா. போர் நிறுத்த ஜெனீவா உடன்படிக்கையை மீறி வெறித்தனமாக நடந்து கொண்டுள்ளனர் என்பதைக் காட்டுவதற்காக இந்தப் படங்கள் வெளியாகியுள்ளதாக ஈழத் தமிழர் இணையங்கள் கூறியுள்ளன.

சரணடைய வந்த புலிகள் தலைவர்களை ஈவு இரக்கமின்றி சுட்டுக் கொல்லுமாறு கோத்தபயா ராஜபக்சே உத்தரவிட்டார் என்று சில தினங்களுக்கு முன்பு பொன்சேகா கூறியிருந்தார். ஆனால் சிங்களர்கள் மத்தியில், நம்மைக் காட்டிக் கொடுத்து விட்டார் என்று கொதிப்பு கிளம்பியதால் நான் அப்படிச் சொல்லவில்லை என்று அவர் மறுத்தார் என்பது நினைவிருக்கலாம்.

கொல்லப்பட்ட இந்தப் பெண் துவாரகாவோ இல்லையோ, ஒரு பெண் மிகக் கொடூரமான பாலியல் கொடுமைக்குள்ளாக்கப்பட்டு கொல்லப்ட்டிருக்கிறார். அதைச் செய்தது இலங்கை ராணுவம் என்ற உண்மை மட்டுமே இப்போதைக்கு தெளிவாகத் தெரியும் உண்மையாகும்.

Advertisements

திசெம்பர் 16, 2009 Posted by | Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

சிங்கள மயமாக்கல் தீவிரம்- மட்டக்களப்புடன் சிங்கள கிராமங்கள் இணைப்பு

நன்றி  – தட்ஸ்தமிழ்

மட்டக்களப்பு: தமிழ் மக்கள் பெரும்பான்மையாக உள்ள பாரம்பரிய தமிழர் பகுதியான மட்டக்களப்புடன், சிங்கள கிராமங்களை இலங்கை அரசு இணைத்துள்ளது. இதன் மூலம் மட்டக்களப்பை முழுமையாக சிங்கள மயமாக்க அது திட்டமிடுவது தெளிவாகியுள்ளது.

பாரம்பரிய தமிழர் பகுதிகளான திரிகோணமலை உள்ளிட்டவை இன்று சிங்கள மயமாகி விட்டன.

இந்த நிலையில் விடுதலைப் புலிகளிடமிருந்து மீட்கப்பட்டுள்ள வடக்கு மாகாணத்தை முழுமையாக சிங்கள மயமாக்கும் நோக்கில் அரசு ஈடுபட்டு வருகிறது.

படிப்படியாக இந்த வேலையைச் செய்து வரும் இலங்கை அரசு, இதன் பொருட்டே, இடம் பெயர்ந்தோர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள தமிழ் மக்களை அவர்களது சொந்த ஊர்களுக்கு செல்ல விடாமல் தடுத்து வைத்திருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், பல்வேறு சிங்கள கிராமங்களை மட்டக்களப்பு மாவட்டத்துடன் இணைத்துள்ளது அரசு. 18 வருடங்களுக்கு முன்பு சிங்கள மக்கள், மட்டக்களப்பு கோர்ட்டுக்குப் போவதில் சிரமம் இருப்பதாக கூறி இவற்றை அம்பாறை மாவட்டத்துடன் இணைத்தது இலங்கை அரசு என்பது நினைவிருக்கலாம்.

இந்த நிலையில், மீண்டும் இக்கிராமங்களை மட்டக்களப்பு மாவட்டத்துடன் அரசு இணைத்துள்ளது.

இதன் மூலம் சிங்கள மக்களின் எண்ணிக்கையை அதிகரித்து, படிப்படியாக மட்டக்களப்பை சிங்கள பகுதியாக மாற்ற சிங்கள அரசு முயற்சிப்பதாக கருதப்படுகிறது

ஜூலை 17, 2009 Posted by | Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக